நேற்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சென்றவுடன், என் 6 வயது மகன் முகில்
ஓடிவந்து ஏன் அப்பா நீங்க மிலிட்டரில சேரல என்றான். ஏன் கேட்கிற
என்றேன்.
உங்க கூட ஸ்கூல் படிச்சவங்க சில பேரு மிலிட்டரிக்கு போனதா அம்மா சொன்னாங்க. நீங்ககூட உங்க ஸ்கூல் பிரன்டு ஒருத்தரு
மிலிட்டரிக்கு போய் இறந்துட்டாருன்னு முன்னாடி சொன்னீங்க என்றான்.
நான் அதற்கு, ஆமா, ஆனா எனக்கு மிலிட்டரிக்குப் போக பிடிக்கல அதனால போகல. சரி இந்த கேள்வி ஏன் இப்ப கேக்கறேன்னு சொல்லு என்றேன்.
இன்னைக்கு
எங்க ஸ்கூல்ல ஆன்சாக் டே(ANZAC day) பத்தி எங்க டீச்சர் பேசினாங்க ஒரு
புத்தகத்தையும் படிச்சி காட்டினாங்க. அப்பரம் என்னோட பிரன்ட்ஸ் சில பேரு அவங்க
குடும்பத்திலயிருந்து, தாத்தா, தாத்தவோட அப்பா என்று மிலிட்டரில
இருந்தவங்கள பத்தி சொன்னாங்க. அவங்க சண்டைக்கு போனதுபற்றியும் சொன்னாங்க.
என்னோட கிளாஸ்ல இருக்கிற இன்னோரு பையனோட அம்மா ஏர்போர்ஸ்ல இருக்காங்க.
அவங்க அவன அழைச்சிட்டு போக வரும்போது அந்த யூனிபார்ம்ல வருவாங்க.
எனக்கு யாரும் நம்ம குடும்பத்தில மிலிட்டரில இல்லை என்றான் மூஞ்சிய சோகமா
வச்சிக்கிட்டு.
நம்ம பேமில யாரும் மிலிட்டரில இல்லாதனால நீ பெரியவனாகி ஆஸ்திரேலிய மிலிட்டரில சேருவதற்கு முயற்சி செய் என்றேன்.
கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு நான் போக மாட்டேன் ஏன்னா சண்டை வந்திச்சின்னா துப்பாக்கில சுடுவாங்க என்று சொல்லிட்டு ஓடிட்டான்.